18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான வரிப் பதிவு இலக்கம் அல்லது TIN இலக்கத்தை இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் முறையான முறைமையொன்று தயாரிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதன்படி பிரதேச செயலகத்தினூடாக TIN இலக்கத்தை பெற்றுக்கொள்வது தொடர்பான இறுதிக்கட்ட கலந்துரையாடல் இன்று நிறைவடையவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் டெய்லி சிலோன் செய்திச்சேவைக்கு தெரிவித்தார்.
இந்நாட்டு மக்களின் தரவுகளை உள்ளடக்கிய அரச நிறுவனங்களின் ஊடாக TIN இலக்கத்தை விரைவாக வழங்க முடியுமா என்பது குறித்து ஆராயப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.வருமான வரி செலுத்தாதவர்களை அடையாளம் காணும் வகையில் இந்த புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வளர்ந்த நாடுகளில் வரி செலுத்துபவர் “ஒரு நிலையான நாட்டின் வலுவான குடிமகன்” என்று அங்கீகரிக்கப்படுகிறார்.நாட்டின் வளர்ச்சிக்கு மக்கள் இத்தகைய அணுகுமுறையில் மாற்றம் செய்வது முக்கியம்.
எனவே இந்த வேலைத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு அனைவரினதும் பங்களிப்பை எதிர்பார்ப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்தார்.