நுவரெலியா மாவட்டத்திற்கான பிரதேச செயலக அதிகரிப்பு விடயத்தில் காட்டப்படும் பாரபட்சத்துக்கு எதிராகவும் மாவட்ட மக்களுக்கு நீதிகோரும் முகமாகவும் மலையக அரசியல் அரங்கம் முன்னெடுக்கும் மக்கள் மனு கையுழுத்து இயக்கத்திற்கு ஆதரவு வழங்கி தமது அமைப்பினர் ஊடாக கையெழுத்துக்களைத் திரட்டித்தர இலங்கை ஜமாத்தே இஸ்லாமிக் அமைப்பினர் முனவந்துள்ளனர் என மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
மலையக அரசியல் அரங்கத்தின் உயர்பீட உறுப்பினர்களுக்கும் இலங்கை ஜமாத்தே இஸ்லாமிக் அமைப்பின் உயர் பீட உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பும் கலந்துரையாடலும் நேற்று (24/3) மருதானை தலைமையகத்தில் இடம்பெற்றபோதே இதற்கான உடன்பாடு எட்டப்படாதாகவும். எதிர்காலத்தில் மலையக தமிழர்சமூகத்துக்கும் முஸ்லிம் சமூகத்துக்கும் புரிந்துணர்வை ஏற்படுத்தக்கூடிய இன்னும் பல காத்திரமான செயற்பாடுகளையும் முன்னெடுக்கவும் இரண்டு தரப்பினரும் உடன்பாடு கண்டுள்ளதாகவும் மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திலகராஜ் தெரிவித்துள்ளார்.
மலைவாஞ்ஞன்