பிரமர் ஹரினி பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை!

0
76

தரம் ஆறு கல்வி சீர்த்திருத்தங்களை மையமாக கொண்டு பிரதமர் ஹரினி அமரசூரிய மீது முன்னெடுக்கப்படும் அவதூறு பிரசாரங்களுக்கு முழுமையாக மறுப்பு தெரிவிக்கும் வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்,  அதற்காக பிரதமர் பதவி விலக வேண்டிய அவசியம் கிடையாது என்பதையும் வலியுறுத்தினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“இந்நாட்டு பிள்ளைகளின் எதிர்காலத்தை மிகவும் வலுவானதாக மாற்றியமைக்கும் நோக்கிலேயே கல்வி மறுசீரமைப்பு பணிகளை நாங்கள் ஆரம்பித்தோம்.

இதன்போது சில சிறிய அரசியல் குழுக்கள் பிரதமரை அவதூறு செய்யும் நோக்கிலும் அவருக்கு எதிரான  செயற்பாடுகளை முன்னெடுக்கும் நோக்கிலும் செயற்படுகின்றனர்.  அவர்களின்  செயற்பாடுகளை நாங்கள் முற்றாக நிராகரிக்கிறோம்.

அரசியல் மற்றும் ஏனைய குறுகிய நோக்கங்களுக்காகவே அவர்கள் இவ்வாறு செய்கிறார்கள். ஆனால் தரம் – 6 புதிய பாடத்திட்டத்தில் தவறு நடந்திருக்கிறது. கல்வி அமைச்சும் அதனை ஆராய்ந்துள்ளது. அதன்படி இந்த தவறை செய்தவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

யார் இதனை செய்தார்கள்? எந்த நோக்கத்தில் செய்தார்கள்? எவருடையதேனும் தூண்டலுக்கு அமைவாக செய்யப்பட்டதா? என்று ஆராயப்படும். அதன் சட்ட நடவடிக்கைகளை குற்றப்புலனாய்வு பிரிவு முன்னெடுக்கும்.

மறுமுனையில் உள்ளக விசாரணைகளும் நடத்தப்படும். தவறை திருத்தி சரியான முறையில் ஆறாம் ஆண்டு கல்வித் திட்டத்தை அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காக பிரதர் ஒருபோதும் பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை.” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here