பிரிட்டனில் எலிசபெத் ராணியின் அரண்மனைக்குள் அத்துமீறி நுழைந்ததாக நம்பப்படும் ஆடவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
எலிசபெத் ராணி கிறிஸ்மஸ் பண்டிகைக்காக விண்ட்சோர் அரண்மனையில் இருந்தபோது அந்தச் சம்பவம் நடந்ததுள்ளது.
பாதுகாக்கப்பட்ட இடத்திற்குள் அத்துமீறி நுழைந்தது, ஆயுதம் வைத்திருந்தது ஆகிய சந்தேகத்தின் பேரில் அந்த 19 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார்.
அந்த ஆடவர் அரண்மனை வளாகத்திற்குள் நுழைந்தவுடன் அத்துமீறல் கண்டறியப்பட்டதாகவும் அவர் எந்தக் கட்டடத்திலும் நுழையவில்லை என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
ஜஸ்வந்த் சிங்சயில் என்ற அந்த சந்தேக நபர் மனநல சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.