பிரீமியர் லீக் – செல்சியாவை சாய்த்த அர்செனல்!

0
6

பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில் எமிரேட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான லண்டன் டெர்பி போட்டியில் செல்சியா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணி வீழ்த்தியது. இதன் மூலம் பிரீமியர் லீக் பட்டத்திற்கான பந்தய பட்டியலில் அர்செனல் முன்னிலை வக்கிக்கிறது.

அர்செனல் அணிக்காக வில்லியம் சாலிபா (21′) மற்றும் ஜுரியன் டிம்பர் (66′) ஆகியோர் கார்னர் கிக் வாய்ப்புகளைப் பயன்படுத்தி கோல் அடித்தனர். செல்சியாவுக்கு அர்செனலின் பியரோ ஹின்காபி ஆட்டத்தின் முதல் பாதியில் ஒரு ஓன்-கோல் அடித்தார்.

இந்த வெற்றியால் அர்செனல் 64 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் உள்ள மான்செஸ்டர் சிட்டி அணியை விட 5 புள்ளிகள் முன்னிலையில் உள்ளது. செல்சியா 45 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது.

அர்செனல் அடுத்தாக வருகிற 5 அன்று பிரைட்டன் அணியை எதிர்கொள்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here