பீஸ்ட் படத்திற்கு கடலில் பேனர் வைத்த ரசிகர்கள்! – வைரலாகும் புகைப்படம்!

0
195

நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் ரசிகர்கள் நடுகடலில் பேனர் வைத்த புகைப்படம் வைரலாகியுள்ளது.

விஜய் நடித்து நெல்சன் இயக்கியுள்ள படம் பீஸ்ட். இந்த படத்தில் பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

பீஸ்ட் நாளை மறுநாள் வெளியாக உள்ள நிலையில் ரசிகர்கள் பேனர் வைப்பது, போஸ்டர் ஒட்டுவது என சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றனர். புதுச்சேரி உருளையன் பேட்டையை சேர்ந்த விஜய் ரசிகர்கள் பீஸ்ட் படத்தை வரவேற்று புதுச்சேரி கடற்கரை காந்தி சிலைக்கு பின்புறம் உள்ள கடல் பகுதியில் பீஸ்ட் வாழ்த்து பேனரை அமைத்துள்ளனர். பொதுமக்களுக்கு இடையூறாக வைத்திருக்கும் பேனர்களை அகற்ற அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்ட நிலையில் ரசிகர்கள் கடலில் பேனர் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here