நுவரெலியா மாவட்டம் முழுவதும் ஒரு பீ.சீ.ஆர் இயந்திரம் மாத்திரம் இருந்துவருகின்ற நிலையில் புதிதாக பீ.சீ.ஆர் இயந்திரமொன்று புதிதாக வாங்க அல்லது தற்போதைய பீ.சீ.ஆர் இயந்திரம் பழுதடையும் பட்சத்தில் அதனை பழுதுபார்க்க மஸ்கெலியா பிரதேச சபை உறுப்பினர் ராஜ் அசோக் 10,000. ரூபா நிதி உதவி செய்துள்ளார்.
நம் மக்களை பாதுகாக்கும் பொறுப்புடன் என்னுடைய 2021ம் ஆண்டுக்கான வருடாந்த நிதி ஒதுக்கீட்டிலிருந்து 10000 ரூபாவை வழங்கி இருக்கின்றேன் எனவும் கூறியுள்ளார்.
நீலமேகம் பிரசாந்த்



