தலவாகலையில் இருந்து கொழும்பு கோட்டையை நோக்கி புகையிரத பணியாளர்களை ஏற்றி சென்ற புகையிரம் ஹட்டன் பகுதியில் தடம்புரண்டுள்ளமையால் மலையகத்திற்கான புகையிரத சேவை பாதிப்படைந்துள்ளதாக ஹட்டன் புகையிரத
கட்டுபாட்டு நிலையம் தெரிவித்துள்ளது
இந்த சம்பவம் 24.11.2018. சனிகிழமை இரவு 07மணி அளவில் குறித்த புகையிரதம் தடம் புரண்டுள்ளதாக புகையிரத கட்டுபாட்டு நிலையம் மேலும் தெரிவித்தது புகையிரத வீதிகளை சீர்செய்யும் பணியாளர்களை ஏற்றி சென்ற புகையிரதத்தின்
ஒரு பகுதியில் உள்ள சங்கிலி இலுபட்டு சென்றதன் காரணமாகவே குறித்த புகையிரதத்தின் ஒரு பகுதி தடம்புரண்டுள்ளதாக புகையிரத கட்டுபாட்டு நிலையம் மேலும் தெரிவித்தது.
இதனால் பதுளை கொழும்பு மலையக புகையிரத சேவை தற்காலிகமாக பாதிக்கபட்டுள்ளதாகவும் பணியாளர்களை கொண்டு சீர் செய்தவுடன் மலையகத்திற்கான புகையிரத சேவை வழமைக்கு திரும்பும் எனவும் புகையிரத கட்டுபாட்டு நிலையம் மேலும் தெரிவித்தது.
பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்