இந்தியா வழங்கும் கடன் வசதியின் கீழ் மார்ச் 15 ஆம் திகதி முதல் எரிபொருள் இருப்புக்கள் கிடைக்கும் என்றும், எனினும் அதன் பின்னர் எரிபொருள் அல்லது மின்சார தடை ஏற்படாது என்று எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
எரிபொருள் தட்டுப்பாடு எதிர்வரும் புதன்கிழமையுடன் முடிவுக்கு வரும் எனவும், தேவையான பெற்றோல் மற்றும் டீசல் ஏற்கனவே எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.