புதிய பிரதமர் ரணில் விக்கரமசிங்க அரசாங்கத்தோடு இணையுமாறு பல அரசியல் கட்சிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ள நிலையில் ஜனாதிபதி,பிரதமரூடாக மலையக மக்கள் முன்னணியையும் இணையுமாறு கடிதம் அனுப்பப்பட்ட நிலையில் அக்கடிதம் தொடர்பில் மலையக மக்கள் முன்னணி இவ்வரசாங்கத்தோடு இணையலாமா? அல்லது இணைய வேண்டாமா? என்பது தொடர்பிலான தீர்மானத்தை எடுப்பதற்கான மத்திய குழு கூட்டம் மலையக மக்கள் முன்னணியின் ஹட்டன் தலைமை காரியாலயத்தில்(15/05/2022) மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே.ராதாகிருஸ்ணன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது உரையாற்றிய மலையக தொழிலாளர் முன்னணியின் நிதிச்செயலாளர் புஸ்பா விஸ்வநாதன். இந்த அரசாங்கத்தோடு ஒருபோதும் இணையக்கூடாது.காரணம் ஒட்டுமொத்த இலங்கை மக்களால் ஒதுக்கியெறியப்பட்ட அரசாங்கம் இது.மஹிந்த பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தாலும் ஜனாதிபதி இன்னும் விலகவில்லை.ராஜபக்ஷ குடும்பமே இலங்கை அரசியலில் இருந்து வெளியேறுமாறு இன்னும் நாட்டில் போராட்டங்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு மீள வரும் வரை இப்போராட்டம் தொடராலாம்.எனவே இச்சூழ்நிலையில் நாம் அரசாங்கத்தோடு துணைச்செல்வது ஏற்புடையதல்ல.எனவே இந்த அரசாங்கத்தோடு இணைய கூடாது என மத்தியக்குழு கூட்டத்தில் புஸ்பா விஸ்வநாதன் உரையாற்றினார்.
இதன் பின் குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதோடு இவ்விடயம் தொடர்பில் ஏகமனதாக மத்தியக்குழு கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும் இவ்வரசாங்கத்திலிருந்து தமிழ் முற்போக்கு கூட்டணியும் விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த்