பாராளுமன்றத்தில் கொண்டுவரபட்ட புதிய சட்டமூலம் தோல்வியடைந்தமை குறித்து உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தப்பா பதவி விலக வேண்டுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சீ.பி.ரத்நாயக்க தெரிவித்தார்.26.08.2018 அன்று அட்டன் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனை தெரிவித்தார்.
இதன் போது அவர் மேலும் கருத்து தெரிவித்ததாவது,
மாகாணசபை தேர்தலை எவ்வாறு நடத்தினாலும் பரவாயில்லை. அதற்கு நாங்கள் தயாராகவுள்ளோம். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது எங்களின் வேட்பாளராக மஹிந்த ராஜபக்ஷவை களமிறக்குவோம் என்பதனை நான் உறுதியாக கூறுகிறேன்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினை சார்ந்த நாங்கள் பிழையான விடயங்களை பிழையெனவும், சரியான விடயங்களை சரியெனவும் கூறுவோம். ஆகையால் தான் பிழையான விடயங்களுக்கு நாங்கள் எதிர்பினை தெரிவிக்கின்றோம்.
இதேவேளை கொழும்பில் எதிர்வரும் 05ம் திகதி நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக இடம் பெறவிருக்கின்ற ஆர்பாட்டத்திற்கு மலையக மக்களை கலந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்வதாக இந்த ஊடக சந்திப்பின் போது அவர் மேலும் தெரிவித்தார்.
க.கிஷாந்தன், எஸ்.சதீஸ்



