மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு அமைச்சினூடாக அமைக்கப்பட்டுள்ள தனி வீட்டுத்திடங்கள் உட்பட பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை பயனாளிகளுக்கு கையளித்தல் தொடர்பிலான விசேட கலந்துரையாடலில்
அட்டன் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 191 புதியவீடுகளை பத்து கட்டங்களாக மக்கள் பாவனைக்கு கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சினூடாக நிர்மாணிக்கபட்டுள்ள தனிவீடுகள். விளையாட்டு மைதானங்கள்,பாதைகள் உட்பட பல்வேறு அவிருத்தி திட்டங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் பயனாளிகளின் பாவனைக்கு கையளித்தல் தொடர்பிலான விசேட கலந்துரையாடலின் போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டது.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் இணைப்புச்செயலாளர் நகுலேஸ்வரன் தலைமையில் நோர்வூட் விளையாட்டு மைதானத்தின் கேட்போர் கூடத்தில் 12.05.2018 இடம்பெற்ற கலந்துரையாலில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் மத்தியமாகணசபை உறுப்பினர் ஸ்ரீதரன் பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட பிரதேச அமைப்பாளர்களும் கலந்துகொண்டனர்.
இதன் போது நிர்மாணிக்கப்பட்டுள்ள வீட்டுத்திட்டங்களுக்கு 48 மில்லியன் ரூபா நிதியில் பாதைகள் நீர்வசதிகள் உட்பட சகல அடிப்படை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.மேலும் ஜுன் மாதத்தில் 8 ,கட்டங்களாக 167 வீடுகளும் ஜுலை மாதத்தில் 10 கட்டங்களாக 214 வீடுகளும் மக்கள் பவணைக்கு கையளிக்கப்படவுள்ளது
நுவரெலியா தொகுதியில் 68 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 368 வீடுகள் கைளிக்கப்படவுள்ளது
அத்தோடு 320 மில்லியன் ரூபா செலவில் மஸ்கெலிய நுவரெலியா தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பாதைகள் . சிறுவர் பராமரிப்பு நிலையங்கள். பாதுகாப்பு வேளிகள்.விளையாட்டு மைதானங்கள் என்பன மக்கள் பாவணைக்கு கையளிக்கப்படவுள்ளது
மேலும் அம்பகமுவ மற்றும் நுவரெலியா பிரதேச செயலகங்களினூடாக மேற்கொள்ளப்பட்டுள்ள விசேட வேலைத்திட்டங்களினூடாக. 240 மில்லியன் ரூபா செலவில் நிமாணிக்கப்பட்டுள்ள பாதைகள் .சுயத்தொழில் ஊக்குவிப்பு. விளையாட்டு மைதானம். கலாசார மண்டபம் ஆகியன மக்கள் பாவணைக்கு கையளிக்கப்படவுள்ளது.
அத்தோடு பெரும்பாதைகள் புணரமைத்தல் திட்டத்தின் கீழ் 8 பெருந்தெருக்கள் நிர்மாணப்பனிகள் நிறைவடைந்து மக்கள் பாவணைக்கு கையளிக்கப்படவுள்ளதுடன் 9 பாதைகள் நிர்மாணப்பனிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது மேற்படி திட்டங்கள் கட்டம் கட்டமாக மக்கள் பாவணைக்கு கையளிக்கும் செயற்பாடுகள் தொடர்ப்பிலே கலந்துரையாடப்பட்டது
அத்தோடு எதிர்காலத்தில் சுகாதார திட்டத்தினூடாக சிறுவர் பாராமரிப்பு நிலையம்.மலசலகூடவசதிகள்.சுத்தமான குடி நீர் திட்டங்கள் . அடிப்படை வசதிகளுடனான வைத்திய பராமரிப்பு நிலையம்.புதிய தாதியர்களை இணைத்தல் போன்ற திட்டடங்களை ஆரம்பித்தல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்