தலவாக்கலை புனித பத்திரிசியார் கல்லூரியானது தனது என்பத்தோறாவது அகவையிலே காலடி எடுத்து வைக்கும் இவ்வாண்டில் சிறப்பு நிகழ்வாக பாடசாலை நிர்வாகத்தினால் நடை பவணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நடை பவனியானது பாடசாலையின் அதிபர் அருட் தந்தை மரியாதைக்குரிய டொமினிக் அவர்களின் தலைமையில் மே மாதம் 17 ம் திகதி வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு தலவாக்கலை நகர சபைக்கு அருகாமையில் ஆரம்பமாகி தலவாக்கலை நகர பிரதான வீதி வழியாக சென்று புனித பத்திரிசியார் கல்லூரி வளாகத்தில் இனிதே நிறைவு பெறவுள்ளது.
இதில் அருட் தந்தையர்கள், அருட் சகோதரர்கள், அருட் சகோதரிகள், கல்வி அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பழையமாணவர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் என பலர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
தலவாக்கலை பி.கேதீஸ்