புரட்டொப் பகுதிக்கு அரச பேருந்து அவசியம். செந்தில்குமார் வலியுறுத்தல்.

0
316

புஸல்லாவையிலிருந்து புரட்டொப் செல்லும் பாதைக்கு அரச பேருந்து போடவேண்டுமென கொத்மலை பிரதேச சபை உறுப்பினர் பெ.செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்

புஸல்லாவையிலிருந்து புரட்டொப் வழியாக ரஸ்புருக் பகுதிக்கு செல்லும் பாதையில் அரச பேருந்து சேவையை நடைமுறைப்படுத்த வேண்டும். இவ் வழியாக தனியார் பேருந்துகளே சேவையில் உள்ளது.ஆனால் அவை அனைத்திலும் அதிகமாக கட்டணம் அறவிடுவதாகவும் அளவுக்கு மிஞ்சிய மேலதிகமாக பயணிகள் ஏற்றுவதாகவும் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.மேலும் பயண இருக்கைக்கு அதிகமாக ஆட்களை ஏற்றியமையினாலேயே கடந்த வாரத்தில் பஸ் குடைசாய்ந்து இருவர் உயிரிழப்பிற்கான வாய்ப்பு ஏற்பட்டதோடு பேருந்தும் தீ வைத்து கொளுத்தப்பட்டது. அதுமட்டுமல்லாது இவ்வழியாக எல்பொட வடக்கு பாடசாலை,அயரி பாடசாலை, புரட்டொப் பாடசாலை, ரஸ்புருக் பாடசாலை, மேமொழி பாடசாலை என ஐந்து பாடசாலை மாணவர்கள் இவ்வழியையே பயன்படுத்துகின்றனர்.

ஆரம்பத்தில பாதை வசதி இல்லாமையினாலேயே அரச பேருந்து சேவை காணப்படவில்லை ஆனால் தற்போது பாதை காபட் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. எனவே  மீண்டும் விபத்துக்களை தவிர்க்கவும் உரிய நேரத்தில் பஸ் போக்குவரத்து சேவை இப்பாதையில் இயங்க வேண்டுமெனில் உரிய அதிகாரிகள் கவனம் கொண்டு அரச பேருந்தை இப்பகுதியில் சேவையில் ஈடுபடுத்த வேண்டும் என கொத்மலை பிரதேச சபை உறுப்பினர் பெ.செந்தில்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நீலமேகம் பிரசாந்த்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here