தேங்காய் எண்ணெயை புருவங்களின் மீது தடவி வரலாம். புருவமே இல்லாதவர்களுக்கு, சிறு வயதிலிருந்தே நல்ல தரமான மையை புருவத்தில் வைத்து விட்டு வந்தால் புருவம் அதே வடிவத்தில் அழகாக வளரும்.
தினமும் தூங்குவதுற்கு முன்பு புருவங்களில் விளக்கெண்ணெய் தேய்துவந்தால் இரண்டு மாதங்களில் புருவம் அடர்த்தியாக மாறுவதைக் காணலாம்.
இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகையை உண்டாக்கும். இது முடி உதிர்தலுக்கு பொதுவான காரணமாகும்.
இது புருவங்களையும் பாதிக்கும். உணவில் போதுமான இரும்புச்சத்து கிடைப்பது உங்கள் புருவம் வேகமாக வளர உதவும். கற்றாழையின் ஜெல்லை இரண்டு புருவங்களின் மீதும் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்யுங்கள்.
இரவு முழுவதும் நன்கு ஊற வையுங்கள். மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவுங்கள். இந்த செயலை தினமும் செய்து வர, புருவங்கள் அடர்த்தியாக வளர்வதைக் காணலாம்.
தேங்காய் எண்ணெயை புருவங்களின் மீது தடவி, மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.
அதன்பின் 1 மணிநேரம் நன்கு ஊற வையுங்கள். இறுதியில் கிளின்சர் பயன்படுத்தி, புருவங்களை நன்கு கழுவுங்கள்.