20 கடைகளுக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபை சட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. கொழும்பு – புறக்கோட்டை பகுதியில் தரமற்ற கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய இலத்திரனியல் சாதனங்களை விற்பனை செய்த கடைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், 20 கடைகளுக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபை சட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.
கையடக்கத் தொலைபேசி மற்றும் அது தொடர்பான உபகரண விற்பனை நிலையங்களில் நுகர்வோர் விவகார அதிகாரசபை நேற்று ஆய்வொன்றை மேற்கொண்டுள்ளது.
மேலும், இதுபோன்ற தரமற்ற பொருட்களால் வாடிக்கையாளர்கள் அவமதிக்க அல்லது ஏமாற்றப்பட்டால் 1977 என்ற எண்ணை அழைத்து முறைப்பாடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.