அதாவது, புற்றுநோய் சிகிச்சைக்கு உதவி தேவைப்படுவோர் (antibikiligsl@gmail.com) என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளலாம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நடிகர் விஜய் ஆண்டனி புற்றுநோய் சிகிச்சைக்கு உதவி செய்ய புதிய முன்னெடுப்பை ஆரம்பித்துள்ளார்.
அதாவது, புற்றுநோய் சிகிச்சைக்கு உதவி தேவைப்படுவோர் (antibikiligsl@gmail.com) என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளலாம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மேலும், இந்த திட்டத்தை விஜய் ஆண்டனி ஆந்திராவில் உள்ள ஜி எஸ் எல் வைத்தியசாலையுடன் இணைந்து, இலவசமாக சிகிச்சை கொடுக்கும் திட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அதே போல் அந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும், புற்றுநோயாளிகள் சிலரை சந்தித்து அவர்களுக்கு தேவையான பொருட்களையும் வழங்கியுள்ளார்.
நடிகர் விஜய் ஆண்டனியின் இந்த மாற்றத்திற்கு காரணம் பிச்சைக்காரன் 2 படத்தின் போது அவர் சந்தித்த அனுபவங்கள் என்று கூறப்படுகின்றது.
இதேவேளை, விஜய் ஆண்டனியின் இந்த புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.