புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்

0
158

இந்த ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களை கோரும் பணி இன்றுடன் நிறைவடைவதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று (06) நள்ளிரவு 12.00 மணிக்குப் பின்னர் கால அவகாசம் நிறைவடையும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல் கடந்த ஜூன் மாதம் 15ஆம் திகதி முதல் இணையத்தளத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் 15ஆம் திகதி நடைபெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here