புலமை பரிசில் பரீட்சை – 184 புள்ளிகளை பெற்று நோர்வூட் மாணவன் சாதனை

0
122
2025ம் ஆண்டுக்கான புலமை பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளிவந்துள்ள நிலையில் ஹட்டன் கல்வி வலையம் கோட்டம் இரண்டிற்குட்பட்ட நோர்வூட் ஆரம்ப பிரிவு தமிழ் வித்தியாலயத்தை சேர்ந்த சுரேஸ் தரின் கெளசான் வெட்டு புள்ளிகளுக்கு அதிகமாக 184 புள்ளிகளை பெற்று சாதனை படைத்துள்ளார்.
சாதனை படைத்த மாணவனுக்கு பாடசாலை அதிபர் ஆர்.யோகராஜ் வாழ்த்துக்களை தெரிவித்ததோடு அப்பாடசாலையின் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் பாரட்டு தெரிவித்தனர்.
இதேவேளை குறித்த பாடசாலையில் வெட்டுபுள்ளிகளுக்கு மேலாக வினோதன் மோனிஸ் 142, திலகர்மணி லக்சின் 136, மணிகண்டன் தேனுஸ் 151, விஸ்வராஜா லயோதிகன் 151, தொண்டமான் கேசோரி 152, பிரதீப் ரிஸ்மி 138, ரெங்கநாதன் ஹரித்ரவதனா 152, ஹய்தா அப்துல் சமித் 140, விஸ்வநாத் மகிஷனா 135, ஞானகுமார் அவந்திகா 155, யதீஸ்குமார் அலைனா கேசி 153, கலைவானன் லக்ஸனியா 134, லிங்கநாதன் ஜேசுவரன் ஹோலினா பிரேவ் 138, நெவில் பேணரான்டோ ரொஸ்சின் ஜெசிகா 152, கனகராஜா கபிஸ்கா 133, ஞானகுமார் ஆத்மிக்கா142, லிங்கேஸ்வரன் யசிக்கா 151, சிமியோன் பிரவினா 132, பேசில் பெசில்சந்ரகாசன் அனலியா பிரதிக்ஸா 151, பிரபாகரன் சேஸ்வன் 133,  கார்த்திகேசன் கெஸ்மீரா ஜொய்சி 141, சந்திரகுமார் தினுசியானி 135, திருச்செல்வம் சஸ்விதா 139 ஆகிய மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்த உள்ளனர்.
இதேவேளை நோர்வூட் ஆரம்பபிரிவு பாடசாலையில் கடந்த ஐந்த வருடங்களாக புலமை பரீசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றாலும் அந்த மாணவர்களுக்கென நிலையான கட்டிடம் ஒன்று இல்லையென பெற்றோர்கள் சுற்றி காட்டுகின்றனர்.
குறித்த பாடசாலைக்கான காணி ஒதுக்கீடு மேற்கொண்டுள்ள போதிலும் தற்காலிக மண்டபம் ஒன்றில் இயங்கி வருவதோடு மேலதிகமாக தொண்டமான் விளையாட்டு மைதானத்தில் நான்கு வகுப்பறைகள் இயங்கி வருவதோடு நோர்வூட் ஆரம்பபிரிவு தமிழ் வித்தியாலயத்தில் சுமார் 400 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here