தலவாக்கலையிலிருந்து வட்டகொடை பிரதேசத்தை நோக்கி பயணித்த வேன் ஒன்று தலவாக்கலை – பூண்டுலோயா பிரதான வீதியில் வட்டகொடை ஒக்ஸ்போட் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த வேன் 07.04.2018 அன்று இரவு 09.00 மணியளவில் பாதையை விட்டு விலகி தொலைபேசி கம்பத்துடன் மோதுண்டு தேயிலை மலையில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. வேனில் சாரதியுடன் மற்றொருவரும் பயணித்துள்ளதாகவும், எனினும் இருவர் உராய்வு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.
எதிரே வந்த வாகனம் தவறான பக்கத்தில் வந்ததன் காரணமாகவே இந்த விபத்து நேர்ந்ததாக நேரடி விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இவ்விபத்து தொடர்பில் தலவாக்கலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(க.கிஷாந்தன்)