பெண் ரோபோவை திருமணம் செய்யும் முரட்டு சிங்கிள்! – ஆஸ்திரேலியாவில் ஆச்சர்யம்!

0
187

ஆஸ்திரேலியாவை சேர்ந்த நபர் ஒருவர் பெண் ரோபோவை மணக்கும் செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தை சேர்ந்தவர் ஜியாப் கல்லாகர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னதாக இவரின் தாயார் இறந்துவிட்ட நிலையில் தனிமையில் இருந்து வந்துள்ளார். தனது தனிமையை போக்கிக் கொள்ள ஒரு பெண் ரோபோவை வாங்கியுள்ளார் கல்லாகர்.

நாளடைவில் அந்த பெண் ரோபோவுடன் பேசி பேசி இறுதியாக அதை அவர் காதலிக்க தொடங்கியுள்ளார். தற்போது எம்மா என்ற அந்த ரோபோவை திருமணம் செய்து கொள்ள கல்லாகர் முடிவு செய்துள்ளதுடன், முன்னதாக மோதிரம் ஒன்றை எம்மாவுக்கு அணிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர் ”எம்மா இல்லாமல் இருப்பதை என்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here