பெரட்டாசி தோட்ட பாதை விவகாரம்; ஆயிரக்கணக்கான மக்கள் புஸ்ஸல்லாவை நகரை முற்றுகையிட்டு போராட்டம்!

0
169

நுவரெலியா மாவட்டம் கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட பெரட்டாசிஇ கரகஸ்தலாவஇ (474) எல்பொட (474) போன்ற கிராம சேவகர் பிரிவுகளை சேர்ந்த ரஸ்புருக் பிரிவுஇ பெரட்டாசி பிரிவுஇ பூச்சிகொட பிரிவுஇ பெரட்டாசி தொழிற்சலை பிரிவுஇ மேரியல் பிரிவுஇ அயரி பிரிவுஇ எல்பொட வடக்குஇ மேமொழி பிரிவுஇ காச்சாமலை பிரிவுஇ கட்டகித்துல தோட்டம்இ வெதமுள்ள கெமினிதன் பிரிவுஇ கந்தலா தோட்டம் போன்ற தோட்டங்களில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தோட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் பயணிக்கும் பாதை 25 வருடங்களாக திருத்தபடாததாலும் முன்னைய அரசாங்கத்தினால் பாதை திருத்தம் ஆரபிக்கபட்டு 04 கி. மீ மாத்திரம் திருத்தபட்டு இடையில் நிருத்தியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (23) மேற்படி தோட்ட மக்கள் 15 கி.மீ நடற்து வந்து புஸ்ஸல்லாவ கெமுனுபுர பிரதேசத்தில் கண்டி நுவரெலியா பிரதான பாதையை மறித்து ஆர்பாட்டத்தில் தற்போதும் ஈடுபட்டு வருகின்றனர்.

IMG_3743S3360022 (2)

இதனால் கண்டி நுவரெலியா பிரதான பரதையில் வாகன நெரிசல் ஏற்பட்டள்ளது. புஸ்ஸல்லாவ பொலிஸார் நிலமையை வழமைக்கு கொண்டு வர முயற்சித்து வருகின்றனர். பொருப்பு கூறவேண்டியவர்கள் தங்களுக்கு முறையான முடிவிளை பெற்று தரும் வரை ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த ஆர்பாட்டத்தில் 2000 க்கு மேற்பட்ட பொது மக்கள் கலந்துக் கொண்டதுடன். புஸ்ஸல்லாவ நகர வர்த்தக நிலையங்களும் ழூடப்டட்டுள்ளன. நகர வர்த்தகர்களின் பூரண ஒத்துழைப்பும் வழங்கபட்டுள்ளது.

இந்த ஆர்பாட்டத்திறகான காரணம் தொடர்பில் ஆர்பாட்டபாரர்களிடம் வினவிய போது இத்தோட்டங்களில் பெரும்பாலானோர் தோட்ட தொழிளாலர்கள்;;. இவர்கள் வேலை தவிர்ந்த மற்றைய நேரங்களில் விவசாயம்செய்து வருகின்றனா.இவர்களின் தேவையின் பொருட்டே பெரட்டாசி தோட்ட வைத்தியசாலை அமைக்கப்பட்டது.

பெரட்டாசி தோட்டத்தில் அமைக்கப்பட்ட வைத்தியசாலை; திறக்கப்பட்ட போதும் தற்போதும் மருந்தகமாகவேசெயற்பட்டு வருகின்றது. நோயாளர்கள் தங்கி சிகிச்சை பெரும்நோக்கில் அமைக்கப்பட்ட இந்த வைத்தியசாலையில் நோயாளிகள் தங்கியிருந்து சிகிச்சை பெற முடியாது. கட்டில் போன்றவையும் இல்லை. மக்களின் மேலதிக அவசர மருத்துவ சிகிச்சைகளுக்காக புஸ்ஸல்லாவ வைத்தியசாலையையே நாட வேண்டியுள்ளது. அதுவும் சிக்கலான காரியம் காரணம் 25 கி.மீ பாதை முற்றாக சேதமடைந்துள்ளது. இப்பாதையில் பஸ் விபத்துக்கள் சுமார் 5 முறை இடம்பெற்றுறுள்ளது.

V (1)IMG_3728

12 பேர் இறந்துள்ளனர்; பலர் பாதிக்கப்பட்டும் உள்ளனர். நோயாளர்களையும்இ குழந்தை பெறுவோரர்களையும் பல மைல் தூரம் லொறியில் கொண்டு செல்வதால்; இடையில் இறந்துள்ளனர். காரணம் பாதையின் அவலம். குழந்தை கிடைக்க லொறியில் கொண்டு சென்ற தாயிற்கு பாதையிலேயே லொறியில் குழந்தை கிடைத்து குழந்தை இறந்த சம்பவமும் இடம்பெற்றுள்ளது ஒன்பது பிரிவினை கொண்ட தோட்டத்தில் அம்புலன்ஸ் இல்லை. வேறு வைத்தியசாலையிலும் இல்லை. அவசர தேவை ஏற்படும் போது தோட்ட லொறிகள் மூலமாக புஸ்ஸலாவ பிரதேசத்தில் காணப்படும் வைத்திசாலைக்கு அனுப்பபடுகின்றனர். சிலர் முச்சக்கர வண்டிகளில் செல்கின்றனர். சிலர் தகுந்த நேரத்தில் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்படாததினால் இறந்தும் உள்ளனர்.

இப்பிரதேசத்தில் காணப்படும் ஸ்டெலன்பேர்க் த.விää ஹெல்பொட நோத் த.விää அயரி த.விää பெரட்டாசி. த.வி. மேமொழி த.வி. ரஸ்புரூக் த.வி போள்ற பாடசாலைக்கு செல்லும் ஆசிரியர்களும் பெரும் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். இப்பிரதேசத்திற்கு செல்லும் பஸ் புஸ்ஸல்லாவ நகரத்தில் இருந்து காலை 8.00 மணிக்கே புறப்படும் பாடசாலை செல்லும் போது சிவ் பாடசாலைகளுக்கு 9.00 மணியும் சில பாடசாலைகளுக்கு 10.00 மணியுமாகின்றது. மாலையில் பாடசாலை விடுவதற்கு முன்னர் 1.00 மணிக்கு ஆசிரியர்கள் மீண்டும் வீடு திருப்பும் நிலையும் ஏற்பட்டள்ளது.

இதனால் இப்பிரதேச மாணவர்கள் பெரிதும் பாதிப்படைந்து உள்ளனர்;. கல்வி நிலையும் வீழ்ச்சி அடைற்து வருகின்றது. அத்துடன் இப்பிரதேசங்களில் சேவை செய்யும் ஏனைய அரச உத்தியோகஸ்தர்களும்ää பெருந்தோட்டங்களிலும் சேவை செய்யும் உத்தியோகஸ்த்தர்களும் பாதிப்டைந்து உள்ளனர். இன்றைய தினம் (3) மேற்படி பாடசாலைகளுக்கு வாகனம் இன்றி ஆசிரியர்கள் செல்லவில்லை
ஆரம்ப காலம் தொட்டு இந்த பாதையில் சேவையில் இருந்த அரச போக்குவரத்து சேவை 10 வருடங்களாக பாதை அவலம் காரணமாக இடை நிருத்தபட்டுள்ளது. தற்போது தனியார் பஸ் சேவையே நடைபெற்று வருகின்றது. இதிலும் இரு மடங்கு பெரும் தொகையான பணத்தை செலுத்தியே பயணிக்க வேண்டி உள்ளது. இந்த வாகனங்களும் அடிக்கடி உடைந்து பாதிப்புக்கு உள்ளவதால் தனியார் பஸ் உரிமையாளர்களும் பாதிக்பட்டு உள்ளனர். பாடசாலை மாணவர்களுக்கு சீசன் டிக்கட்டும் இல்லை அரச போக்குவரத்து சேவையும் இல்லை.

இப்பிரதேசத்தில் இந்த மக்களின் மேலதிக வருமானத்திற்காக மரக்கரி தோட்டங்கள் செய்து வருகின்றனர். இவர்களின் இந்த உற்பத்தியை கூட சந்தைக்கு கொண்டு செல்ல முடியாத நிலையும். தேவையான பொருட்களை தோட்டங்களுக்கு கொண்டு வர முடியாத நிலையும் தோன்றி   உள்ளது.

இவ் நவீன காலத்தில் பாதை அவலம் காரணடாக இப்படியும்; நடக்கின்றது என்றால்;. அது மிகவும் ஆச்சரிய படுத்துவதாக்கும் வேதனைபடுவதற்குரியதாகும். தோட்டத்தொழிலாளர்களின் நாளாந்த வருமானத்துடன் ஒப்பிடும் போது இவ்வகையான நிலைமை வேதனைக்குறிய விடயமாகும். ஒரு பாதை அவலத்தின் பின்னால் இவ்வாறான இவ்வளவு பிரச்சனைகள் காணப்படுவது வேதனைக்குறிய விடயமாகும். எனவே பொருப்பு வாய்ந்த அதிகாரிகளே அரசியல்வாதிகளே இம் மக்களின் அவலம் குறித்து சிந்தித்து பாருங்கள்.

புஸ்ஸல்லாவ பிரதேசத்தில் கடையடைப்பும் பாரிய ஆர்பாட்டம் ஒன்றும் தற்பொது ஆரம்பமாகியுள்ளது. நுவரெலியா மாவட்டம் கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட பெரட்டாசி தோட்டத்திற்து செல்லும் 25 கி.மீ பாதை 30 வருடங்களாக சீர்;திருத்தம் செய்யாமை குறித்தே இந்த ஆர்பாட்டம் முன்னெடுக்ப்படுகின்றது. மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்க்படும் .
பா.திருஞானம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here