பெருந்தோட்ட காணிகளை கையகப்படுத்தவே தொண்டமான் குடும்ப அரசியல் வேண்டாம் என்கின்றனர்.

0
138

பண்டார நாயக்க குடும்பம் அரசியலுக்கு வரும் போதும் மஹிந்த ராஜபக்ஸ குடும்பம் அரசியலுக்கு வரும்; போதும் சந்தோசப்படும் சிலர் தொண்டமான் குடும்பம் அரசிலுக்கு வரும் போது மாத்திரம் குடும்ப அரசியல் வேண்டாம் என்கின்றனர் பெருந்தோட்டத்துறையில் எல்லோருக்கும் ஒரு ஆசையிருக்கிறது. இது சௌமியமூர்த்தி தொண்டமான் காலத்திலும் இருந்தது ஆறுமுகன் தொண்டமான் காலத்திலும் இருந்தது. ஆறுமுகன் தொண்டமான் மறைவுக்கு பின் நினைத்தார்கள் இதனுடன் எல்லாம் முடிந்து விட்டது ஆகவே பெருந்தோட்ட காணிகளை நாம் எப்படி வேண்டும் என்றாலும் கையாளலாம். என்று ஆனால் தொண்டமான் ஐயாவை விட ஒரு படி மேலே சென்று செயற்படும் அளவுக்கு தான் ஜீவன் தொண்டமான் இன்று இருக்கிறார.; எனவே இதனை தாங்கிக்கொள்ள முடியாத சிலர் குடும்ப அரசியல் வேண்டாம் என தெரிவிக்கின்றனர் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் நிதிச்செயலாளருமான மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அக்கரபத்தனை பசுமலை நாகசேன வீதியினை இணைக்கும் குறுக்கு வீதி சுமார் 295 லட்சம் ரூபா செலவில் மத்திய மாகாண சபைக்கான நிதி ஒதுக்கீட்டில் காபட் இட்டு புனரமைக்கப்பட்ட வீதியினை மக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்கும் நிகழ்வு ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் இன்று (27) நடைபெற்றது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்;.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் இந்த பிரதேசத்தில் வாழும் பலர் இந்த வீதியினை அபிவிருத்தி செய்து தருமாறு கோரிக்கை விடுத்தனர் அதனை தொடர்ந்து மாகாணத்துடன் தொடர்பு கொண்டு இந்த வீதியினை அபிவிருத்தி செய்யுமாறு ராஜாங்க அமைச்சர் விடுத்த கோரிக்கைக்கு அமைய இன்று இந்த வீதி திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று நுவரெலியா மாவட்டத்தில் அமைச்சர் ஜீவன் தொண்டமானின் வேண்டுகோளுக்கமைய பல்வேறு அபிவிருத்தி வேலைகள் நடைபெற்று வருகின்றன. பல தோட்டப்பாதைகள் காபட் பாதைகளாக மாறியுள்ளன.

பல அபிவிருத்தி திட்டங்கள் ஜீவன் தொண்டமான் அமைச்சர் ஊடாக வந்துள்ளன. ஆனால் சிலர் இன்று கூறி வருகிறார்கள் ஒன்றும் நடக்கவில்லை என்று. அதிகமானவர்கள் சொல்கிறார்கள் இன்று ஊடகத்தில் அரசியல் செய்பவர்களும் இருக்கிறார்கள் இந்த மாதிரி மக்கள் மத்தியில் சென்று அரசியல் செய்பவர்களும் இருக்கிறார்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸை பொருத்த வரையில் எப்போதும் மக்கள் மத்தியில் சென்று மக்களுக்கு என்ன தேவை என்று கேட்டு அதனை செய்து கொடுத்து வந்துள்ளது. இப்போது நேற்றிலிருந்து புதிதாக புதிய புதிய கண்டுபிடிப்புக்களை செய்து வருகிறார்கள் ஜீவன் தொண்டமானுக்கு எல்லை தெரியாது என்கிறார்கள் ஜீவன் தொண்டமான் அவர்கள் நேரடியாக வரவில்லை அவர் மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமானுடன் இரண்டு மூன்று வருடங்கள் இருந்து தோட்டங்களுக்கு சென்று அவர்களுக்கு தேவையானதை செய்து கொடுத்து விட்டுதான் வந்திருக்கிறார்.

ஆகவே ஜீவன் தொண்டமான் அவர்களுக்கு வலப்பனை அம்பகமுவ, அங்குரான்கெத்த ஆகிய பிரதேசங்களின் தொங்கல் தெரிந்ததனால் தான் ஒரு லட்சத்திற்கும் மேல் வாக்குகளை அளித்து மக்கள் கொண்டு வந்துள்ளார்கள். ஆகவே எதிர்காலத்திலும் பல்வேறு அபிவிருத்தி பணிகள் நுவரெலியா மாவட்டத்தில் ஜீவன் தொண்டமான் தலைமையில் முன்னெடுக்கப்படும் பலரின் தேவையற்ற விமர்சனங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய தேவையில்லை என அவர் இதன் போது தெரிவித்தார்.

 

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here