பெரும் எண்ணிக்கையிலான சுற்றுலா பிரயாணிகள் நுவரெலியா வருகை. சுகாதார விதிமுறைகளை பின்பற்றுமாறு சுகாதார பிரிவினர் கோரிக்கை.

0
126

விடுமுறையினை முன்னிட்டு நாட்டில் பல்வேறு பாகங்களிலிருந்து நுவரெலியா மாவட்டத்தினை நோக்கி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பிரயாணிகள் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
தற்போது பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு இருப்பதனாலும்,இவ்வருடத்தின் இறுதி மாதத்தின் விடுமுறையாக காணப்படுவதனாலும் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் நுவரெலியாவுக்கு விடு முறையினை கழிப்பதற்காக வருகை தந்துள்ளனர்.

வருகை தந்தவர்களில் பெருபாலானவர்கள் சுகாதார விதி முறைகளை பின்பற்ற தவறுவதனால் எதிர்காலத்தில் மீண்டும் ஒரு தொற்று ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் எனவே சுற்றலா பயணிகள் சுகாதார விதி முறைகளை பின்பற்றுமாறும் சுகாதார பிரிவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுற்றுலா பிரயாணிகளின் வருகை காரணமாக டெவோன் மற்றும் சென் கிளையார் நீர் வீழ்ச்சி காட்சிக்கூடங்களில் வாகனங்கள் நிறைந்து காணப்படுகின்றன.

மக்கள் வருகை தந்த போதிலும் பொருளாதார நெருக்கடி காரணமாக பொது மக்கள் பொருட்கள் கொள்வனவு செய்வதில் தயக்கம் காட்டி வருவதாகவும் வர்த்தக நடவடிக்கைகள் சூடு பிடிக்கவில்லை என்றும் மக்கள் தங்களது அத்தியவசிய தேவைகளை மாத்திரம் பூர்த்தி செய்து கொள்வதற்கு பொருட்களை கொள்வதாகவும் இதனால் தங்களது வர்த்தக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

 

கே.சுந்தரலிங்கம் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here