இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை 5 ரூபாவினால் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
பாண் தவிர்ந்த மற்றைய பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படுமெனவும் எவ்வாறாயினும் பாணின் விலையை அதிகரிக்காது இருப்பதற்கு அரசாங்கத்திடமிருந்து மானியத்தை எதிர்பார்ப்பதாகவும் அந்த மானியம் கிடைக்காவிட்டால் பாணின் விலை 10 ரூபாவினால் எதிர்வரும் வாரங்களில் அதிகரிக்குமமெனவும் அந்த சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். –