கல்வியமைச்சுக்கும் ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான நேற்று நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது.
எனவே, தங்களிப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு கிட்டும் வரை தொழிற்சங்க போராட்டத்தை தொடர்வதாக ஆசிரியர் சங்கத்தின் ஜோசப் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
எதிர்வரும் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு குறைந்தளவு விண்ணப்பங்களே கிடைத்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. ஐந்தாம் தர மாணவர்களின் விண்ணப்பங்களும் குறைந்தளவே கிடைத்துள்ளது. ஆசிரியர் தொழிற்சங்கப் போராட்டங்களே இவற்றுக்குக் காரணம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.