பேராதனை, கொப்பேகடுவ சந்தியில் – யஹலத்ன பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 37 பேர் காயமடைந்துள்ளனர். ஒருவர் பலியாகியுள்ளார். நெல்லிகலை சர்வதேச பௌத்த நிலையத்திற்கு வழிபடுவதற்காக பூண்டுலோயா பகுதியிலிருந்து பக்தர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
பேருந்து தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது 38 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
பூண்டுலோயா பகுதியைச் சேர்ந்த 79 வயதான ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். காயமடைந்தவர்களில் இருவர் ஆபத்தான நிலையில் கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.