பேருந்து தரிப்பிடத்தில் உள்ள சில கடைகள் நீக்கபட்டமைக்கு தேங்காய் உடைத்து எதிர்பை வெளியிட்ட மக்கள்- பொகவந்தலாவையில் சம்பவம்!!

0
145

பொகவந்தலாவ பேருந்து தரிப்பிடத்தில் உள்ள சில கடைகள் நோர்வூ்ட் பிரதேசசபையின் அதிகாரிகளால் நீக்கபட்டமைக்கு பொகவந்தலாவையில் தேங்காய் உடைத்து எதிர்பை வெளியிட்ட மக்கள்.நோர்வூட் பிரதேசசபையின் அதிகாரிகளினால் பொகவந்தலாவ பேருந்து தரிப்பிட வளாகத்தில் அமைக்கபட்ட ஒர் சில வர்த்தக நிலையங்கள் நோர்வூட் பிரதேசசபையில் அனுமதி பெறாமல் உருவாக்கபட்டமை கோறி பொகவந்தலாவ பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக இருந்த ஒரு சில வர்த்தக நிலையங்களை நீக்கியமைக்கு எதிராக பிரதேசமக்கள் பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக தேங்காய் உடைத்து எதிர்பினை வெளிகாட்டினர்.

எனவே 24.05.2018. வியாழக்கிழமை காலை 11.30 மணி அளவில் குறித்த பேருந்து தரிப்பிடத்தில் உள்ள சில கடைகளை அகற்றுவதற்கு நோர்வூட் பிரதேசசபையின் அதிகாரிகள் வருகை தந்து அகற்ற முயற்சித்த போது அம்பகமுவ பிரதேசசபையின் அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்குமிடையில் அமைதி இன்மை ஏற்பட்டது.

IMG-20180524-WA0020 IMG-20180524-WA0023

அதனை தொடர்ந்து பொகவந்தலாவ பொலிஸாருக்கு அறிவிக்கபட்ட குறித்த கடைகளை இன்று மாலை நான்கு மணி அளவில் அகற்றபட்டமைக்கு அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டமை குறிப்பிடதக்கது .

இதேவேலை குறித்த பகுதியில் கட்சி பேதங்கள் பார்த்து வர்த்தக நிலையங்கள் வழங்கபட்டுள்ளதாக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர். இந்த மக்களின் குற்றச்சாற்று குறித்தது அம்பகமுவ பிரதேசசபையின் தவிசாளர் குழந்தைவேல் அவர்களை தொடர்பு கொண்டு வினவினோம் எனவே குறித்த வர்த்தக நிலையங்கள் பொகந்தலாவ பேருந்து தரிப்பிடத்திற்கு திடீரென வந்தது.

ஆகவே சம்பந்தபட்டவர்கள் உரிய முறையில் நோர்வூட் பிரதேசசபையில் அனுமதியினை பெற்று கொண்டு தாங்களுக்கு வழங்கபடுகின்ற இடங்களில் உரியவர்கள் வர்த்தக நிலையங்களை அமைத்து கொள்ளமுடியுமென குறிப்பிட்டார்.

 

(பொகவந்தலாவ நிருபர்.எஸ்சதீஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here