அதிக கட்டணம் அறவிடும் தனியார் பேருந்துகளைக் கண்டறிவதற்காக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சோதனை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பயணிகளிடம் இருந்து கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் சசி வெல்கம தெரிவித்துள்ளார்.அத்துடன் பண்டிகைக் காலத்தில் தங்களது சொந்த இடங்களுக்குச் செல்பவர்களிடம் தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் அறவிடுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இது தொடர்பாக ஏதேனும் அசௌகரியம் ஏற்படுமாயின் பயணிகள் 1955 என்ற இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தி அறிவிக்க முடியும் என சசி வெல்கம தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.




