பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தொடர்பில் புதிய நடைமுறை!

0
180

பயனர்களின் முன்னணி சமூக ஊடகங்களான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் ப்ளூ டிக் பெற கட்டணம் முறை அறிமுகமாகியுள்ளது.

இதற்கான அறிவிப்பை பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வட்ஸ்ஆப் போன்றவற்றின் தாய் நிறுவனமான மெட்டாவின் ( Meta) பிரதம நிறைவேற்று அதிகாரி மார்க் சூக்கர்பெர்க் வெளியிட்டார்.

அதன்படி, இனி பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் ப்ளூடிக் பெற இணையத்துக்கு மாதத்திற்கு 11.99 அமெரிக்க டொலரும் ஐஓஎஸ் இயங்குதளத்துக்கும் 14.99 அமெரிக்க டொலரும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

அதன் முதல் கட்டமாக இந்த திட்டம் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் அமுல்படுத்தப்பட்டுள்ளது. மற்ற நாடுகளிலும் விரைவில் நடைமுறைக்கு வரும் என மார்க் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here