பொகவந்தலாவையில் அதிரடிப்படையினரினால் தாக்கப்பட்ட இருவர் வைத்தியசாலையில் அனுமதி!!

0
134

விசேட அதிரடிப்படையினரால் தாக்குதலுக்குள்ளாகியதாக கூறப்படும் இருவர் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொகாவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்

பொகவந்தலாவ லொயினோன் தோட்டத்தை சேர்ந்த இருவரே 17.05.2018 மாலை தாக்குதலுக்கு இழக்காகியுள்ளனர்

ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடி படையினரினாலே பாதையில் சென்றுகொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக பொகவந்தலா பொலிஸ் நிலையத்தில் 17.05.2018 மாலை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது

தாக்குதலுக்கு இழக்காகிய இருவரும் பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் 18.05.2018 டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்

அண்மைக்காலமாக பொகவந்நலாவ மானெளி வனப்பகுதியில் சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வு நடவடிக்கை ஈடுபட்டு வந்தவர்கள் அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட நிலையிலே நேற்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் கிடைக்கபெற்ற முறைப்பாட்டையடுத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

 

மு.இராமச்சந்திரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here