பொகவந்தலாவையில் கொங்ரீட் மேடையை உடைத்து மீண்டும் புனரமைக்க எந்த தரப்பினரும் அனுமதி பெறவில்லை – சுமனசேகர தெரிவிப்பு!

0
136

பொகவந்தலாவ லெச்சுமி மத்திய பிரிவு தோட்ட மைதானத்தில் அமைக்கபட்ட கொங்ரீட் மேடையை உடைத்து மீண்டும் புனரமைக்க எந்த தரப்பினரும் அனுமதி பெறவில்லை

அம்பகமுவ பிரதேச செயலாளர் சுமனசேகர தெரிவிப்பு.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் புனரமைக்கபட்டுவந்த கொங்ரீட் மேடையை மீண்டும் புனரமைக்க போவதாகவும் அந்த மேடையினை உடைந்து தரைமட்டமாக்கவதற்கு எந்த ஒரு நபரும் என்னிடம் அனுமதி கோரவும் இல்லை அதற்கான அனுமதியினை நான் வழங்கவும் இல்லையென அம்பகமு பிரதேச செயலாளர் சுமனசேக தெரிவித்தார்

பொகவந்தலாவ லெச்சுமி மத்திய பிரிவு தோட்ட பொது மைதானத்தில் அரையும் குரையுமாக புனரமைக்கபட்டு வந்த மேடை சுமார் ஒருவருடகால மாக கைவிடபட்ட நிலையில் கடந்த வாரம் ஒரு தரப்பினர் குறித்த மேடையை மீண்டும் புனரமைக்கபோவதாக கூறி உடைத்து தரைமட்டமாக்கபட்டமைக்கு எதிராக யாருடை அனுமதி பெற்று இந்த மேடை உடைத்து நொருக்கபட்டது என கோறி தோட்ட பொதுமக்களால் பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் முறைபாடு ஒன்று பதிவு செய்யபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர் .

20180311_092027 20180311_092146

இதேவேலை பொகவந்தலாவ லெச்சுமி மத்திய பிரிவு தோட்ட பொதுமையானத்தில் அமைக்கபட்ட கொங்ரீட் மேடை முறையாக புனரமைக்கபட வில்லை மேடையில் வெடிப்புகள் காணபட்டமை தொடர்பில் எனக்கு முறைபாடுகள் வந்தன ஆனால் இந்த மேடையினை மீண்டும் உடைத்து சீர் செய்வதற்கு எந்த ஒருதரப்பிலும் என்னிடம் அனுமதி பெறவில்லையென மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பாக ஆராய்ந்து இதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளவிருப்பதாகவும் அம்பகமுவ பிரதேச செயலாளர் சுமனசேகர தெரிவித்தார் .

(பொகவந்தலாவ நிருபர் .எஸ்.சதீஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here