பொகவந்தலாவையில் மின்னல் தாக்கியதில் 05பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி!!

0
268

பொகவந்தலாவ மோரா தோட்டபகுதியில் உள்ள தேயிலை மலையில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த 05பெண் தொழிலாளர்கள் மின்னல் தாக்கியதில் ஐந்து பெண் தொழிலாளர்கள் காயங்களுக்கு உள்ளாகி பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பிரதேசவைத்தியசாலையின் வைத்திய அதிகாரி
ஏ.எஸ்.கே.ஜயசூரிய தெரிவித்தார்

இந்த சம்பவம் 24.10.2018.புதன்கிழமை பிற்பகல் 01.30மணி அளவில் இடம் பெற்றதாக தெரிவிக்கபடுகிறது

பொகவந்தலாவ பகுதியில் பெய்த கடும் மழையின காரணமாக  09இலக்க தேயிலை மழையில் கொழுந்து பறித்து கொண்டிருந்த வேலை மீன்கம்பம் ஒன்றின் மீது மின்னல் விழுந்து தொழிலாளர்களை தாக்கி உள்ளதாக பொகவந்தலாவ பொலிஸாரின்
ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது

மின்னல் தாக்குதலுக்கு உள்ளான ஐந்து பெண் தொழிலாளர்களும் பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இவர்கள் குறித்து கவலையடை தேவையில்லை எனவும் வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஏ.எஸ்.கே
ஜயசூரிய மேலும் குறிப்பிட்டார்.

7 3

 

 

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here