கெம்பியன் தொடக்கம் ராணிகாடு வரையான வீதியானது, கல்வி இராஜாங்க அமைச்சரின் 134 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டின் மூலம் அபிவிருத்தி செய்வதற்காக கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 04 திகதி கல்வி இராஜாங்க அமைச்சர் மற்றும் த.மு.கூ முக்கியஸ்தர்கள் இணைந்து அடிக்கல் நாட்டப்பட்டு அன்றைய தினம் புணரமைப்பு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன.ஆனால் முதல் நாள் ஆரம்பிக்கப்பட்ட வேலைகளோடு இவ்வீதி அபிவிருத்தி வேலைகள் கைவிடப்பட்டது.தினம் தோறும் பல மக்கள்,பாடசாலை மாணவர்கள் பயன்படுத்தும் வீதி இவ்வாறு புணரமைக்கபடாமல் கைவிடப்பட்டமைக்கு மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
குலசேகர் லீபன்