பொகவந்தலாவ நகரம் எனது கோட்டையென மார்பு தட்டி கொள்ளும் அரசியல்வாதிகளும் பொகவந்தலாவையின் அபிவிருத்தியின்மையும்!!
நாட்டில் எத்தனையோ தேர்தல்கள் நிறைவடைந்தன் பின் எத்தனையோ ஆட்சிமாற்றங்களும் இடம் பெற்றுள்ள இந் நிலையில் அண்மையில் இடம் பெற்று முடிந்த உள்ளுராட்சி சபையின் பெறுபேறுகளும் வெளிவந்துள்ளபோதும் தனது வெற்றி சந்தோஷத்தினை பகிர்ந்து கொண்டு மக்களுக்கு நன்றி சொல்லும் வகையில் கடந்த வாரம் பொகவந்தலாவ நோர்வூட் புளியாவத்தை ஆகிய பகுதிகளுக்கு இலங்கை தொழிலாளர் காங்ரசின் தலைவரும் அதன் பொதுச்செயலாளரும் வருகை தந்திருந்த போது பொகவந்தலாவ நகரில் அமோக வரவேற்பு அழிக்கபட்டது.
ஆனால் நோர்வூட் பிரதேசச்சபைக்கு கிழ் பொகவந்தலாவ பகுதியில் ஜக்கியதேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்ட தமிழ் முற்போக்கு கூட்டனி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களையும் மக்களையும் சந்தித்து நன்றி கூறுவதற்கு கூட்டணியை சார்ந்த அமைச்சர்கள் பொகவந்தலாவ பகுதிக்கு வராமல் இருப்பது மக்களுக்கு ஒரு கேள்வி கூறியாக இருந்து வருகிறது.
ஆனால் மலையகத்தில் எந்த தொழிற்சங்கங்கள் ஆளும் தரப்பு கட்சியுடன் இருந்தாலும் சரி பொகவந்தலாவ பிரதேசத்தை பொறுத்தவரையில் எவ்வித பாரிய அபவிருத்திகளும் முன்னெடுக்கபடவில்லை என்பதை நாம் இன்று சுற்றிகாட்ட விரும்புகிறோம் .
பொகவந்தலாவ நகரம் என்பது வீரத்திற்கும் வீர தியாகிகளையும் ஈன்டெடுத்த ஒரு பிரதேசம் குறிப்பாக 1958ம் ஆண்டு 02மாதம் 04ம் திகதி ஸ்ரீ குழப்பத்தில் மக்களுக்காக உயிர் நீத்த அய்யா பிரான்சிஸ், மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஸ்தாபக தலைவர் வீ.கே.வெள்ளையன் பிறந்த பொகவந்தலாவ முத்துலெச்சுமி தோட்டம் போன்றவை பெயர் பெற்றிருக்கின்றன.
இது இவ்வாறு இருக்க பொகவந்தலாவ எனது கோட்டையென தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணியின் தலைவரும் தற்பொழுது உள்ளுராட்சி சபை தேர்தலில் ஜக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்ட தமிழ் முற்போக்கு கூட்டனியின் வேட்பாளர் பா.சிவநேசன் கூறுகிறார் .
பொகவந்தலாவ நகரம் உங்களின் கோட்டையென சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். ஆனால் பொகவந்தலாவ நகரில் பொகவந்தலாவ மக்களுக்காக தாங்கள் செய்த தியாகங்கள்தான் என்ன? தாங்கள் செய்த அபிவிருத்திகள் தான் என்ன என்று புத்திஜீவிகள் கேள்வி எழுப்புகின்றனர்.
பொகவந்தலாவ நகரத்திற்கு முதலில் அபிவிருத்தியை கொண்டு வரவேண்டும் வீடமைப்பு திட்டத்தினை மாத்திரம் வைத்து கொண்டு அபிவிருத்தி என்று பெயர் சூடி கொள்ளமுடியாது. இன்று தாங்கள் தமிழ் முற்போக்கு கூட்டணியோடு இனைந்து இருக்கும் தாங்கள் உங்கள் அமைச்சர் பழனி திகாம்பரத்தின் ஊடாக என்ன செய்து இருக்கிறீர்கள்?
இன்று பொகவந்தலாவ சென்மெரீஸ் மத்திய கல்லாரியில் அமைக்கபட்ட மஹிந்த்தோதய தொழிற்நுற்பகூடமும் பொகவந்தலாவ கெம்பியன் தமிழ் மாகாவித்தியாளயத்தில் அமைக்கபட்டுள்ள மஹிந்தோதய தொழில்நுற்ப கூடமும் அமைக்கபட்டு எத்தனை வருடங்கள் அமைச்சர் திகாம்பரத்தின் அரசியல் பலத்தையும் பணபலத்தையும் வைத்து கொண்டு அடாவடி தனத்தையும் பொகவந்தலாவ நகரத்திலே குணடர்களை போல் நடந்து கொள்வதை வைத்தா பொகவந்தலாவ நகரம் உங்களின் கோட்டைஎன்று கூறுவதாக மக்கள் கேள்வி ஏழுப்பகின்றனர்.
சமூகவலைதளங்களில் இது போன்ற அறிக்கை விடுபவர்கள் முதலில் பொகவந்தலாவ பிரதேசத்தில் அமைக்கபட்டுள்ள இரண்டு மஹிந்தோதய தொழிற்நுற்ப கூடத்தினை தமிழ் முற்போக்கு கூட்டனியில் அங்கம் வகிக்கும் கல்வி இராஜாங்க அமைச்சர் இராதகிருஸ்னண் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று மாணவர்களின் பாவனை கையளிக்க வழிவகுங்கள்.
அதன் பிறகு உங்களின் கோட்டை பொகவந்தலாவ என்பதை முடிவு செய்யவேண்டியது மக்கள் பொகவந்தலாவ மண்ணில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் பொகவந்தலாவை மண் மீது பற்று இருக்கிறது எனவே விரத்திற்கு பெயர்போன பொகவந்தலாவ மண்னை உதாசீனபடுத்தாதீர்கள் என்பதே அனைவரினதும் வேண்டுகோளாகும்.
மலையக கள்ளன்