பொகவந்தலாவ பிரஜாசக்தி நிலையம் புனரமைக்காமை நகைப்புக்குரிய விடயம்!!

0
145

பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் தோட்டபகுதியில் 10வருடகாலமாக கைவிடப்பட்டுள்ள பிரஜாசக்தி நிலையத்தினை புனரமைப்பதற்கு அரசாங்கத்தால் நிதி ஒதுக்கபடவில்லை என்பது ஒரு கேலிகூத்தாக இருக்கிறது.

கெர்க்கஸ்வோல்ட் தோட்டபகுதி மக்கள் விசனம் .

2015ம் ஆண்டு உருவாக்கபட்ட நல்லாட்சியின் ஊடாக மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் பிரஜாசக்தி நிலையங்களுள் பழுதடைந்த நிலையங்களை புனரமைப்பதற்கு அரசாங்கத்தினால் நிதி ஒதுக்கிட்டு செய்யபடவில்லையென்பது ஒரு கேலிகூத்தாக இருக்கிறது என புத்திஜீவிகளும் கெர்க்கஸ்வோல்ட் பகுதி மக்களும் விசனம் வெளியீட்டுள்ளனர்.

முறையாக இயங்குகின்ற பிரஜா சக்தி நிலையத்தில் உள்ள கணணிகள் பழுதடைந்தால் அதனை சீர்செய்வதற்கு அரசாங்கத்தினால் நிதி ஒதுக்கபடவில்லையென கூறமுடியுமா?

பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் தோட்டபகுதியில் உள்ள பிரஜாசக்தி நிலையம் தொடர்பில் பிரஜாசக்தி நிர்வாக பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கைகே இந்த விசனம் வெளியிடபட்டுள்ளது.

குறித்த பிரஜாசக்தி நிலையம் பத்துவருடகாலமாக மூடபட்டமைக்கான காரணம் பெயர்பலகை சேதமாக்கமட்டமை தொடர்பாக அல்ல இனந் தெரியாதவர்களால் மேற்கொள்ளபட்ட கல்விச்சியின் காரணமாகவே இந்த நிலையம் மூடபட்டது என்பதினை தற்பொழுது உள்ள பிரஜாசக்தி நிர்வாக பிரிவு தெரிந்து கொள்ளவேண்டும் இதற்கான முறைபாடு நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் பதியபட்டுள்ளதோடு பொகவந்தலாவ மற்றும் நோர்வூட் பொலிஸார் இணைந்து விசாரனைகளை மேற்கொண்டமையும் குறிப்பிடதக்கது.

பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் பிரஜாசக்தி நிலையம் மூடபட்டமைக்கு காரணம் முன்னால் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் எனவே அன்று அவர் செய்த தவரை நல்லாட்சியில் உள்ள அமைச்சர்களும் செய்ய கூடாது என்பதே மக்களின் கோரிக்கையாகும் .

குறித்த பிரஜா சக்தி நிலையத்தினை மீண்டும் புனரமைமைப்பு செய்வதற்கு மக்கள் கோரிக்கைகளை முன்வைக்கவேண்டி அவசியம் இல்லை மலையகத்தில் அனைத்து பிரஜாசக்தி நிலையங்களும் முறையாக இயங்குகின்றதா, அல்லது அதனுடைய குறைபாடுகள் என்ன என்பதினை நிவர்த்தி செய்யவேண்டிய முக்கிய பொறுப்பு அதன் அமைச்சுக்கும் பிரஜா சக்தி நிர்வாகத்திற்கும் இருக்கிறது எனவே இது போன்ற விடயங்களில் அக்கரை காட்டாத தாங்கள் இன்று உண்மை செய்தி வெளிவந்தவுடன் திட்டமுகாமையாளரும், திட்டஇனைப்பாளரும் தப்பித்து கொள்ள பார்கிறார்கள்.

எனவே நல்லாட்சி அரசாங்கம் என கூறி மக்களுக்கும் ஊடகங்களும் சாக்கு போக்கு சொல்லுவதை கைவிட்டு கைவிட பட்ட பிரஜாசக்தி நிலையத்தினை மீண்டும் புனரமைக்க முன்வருமாறு வேண்டுகோள்விடுக்கின்றனர்.

 

எஸ். சதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here