பொகவந்தலாவ வானகாடு தோட்டத்தில் பாலியல் துஷ்பிரயோகம்; சந்தேகநபர் விளக்கமறியலில்!

0
154

பொகவந்தலாவ வானகாட்டு தோட்டத்தில் 16வயதுசிறுமியை காதல் ஆசை காட்டி அழைத்து சென்ற 18வயது சந்தேகநபரை எதிர்வரும் மார்ச் மாதம் 06ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அட்டன் நீதிமன்ற நீதவான் டி.சரவனராஜா உத்தரவிட்டுள்ளார்

20.02.2018.செவ்வாய்கிழமை குறித்த சந்தேக நபரை அட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜபடுத்தபட்ட போதே இந்த உத்தரவு பிரப்பிக்கபட்டது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது

பொகவந்தலாவ வானகாடு தோட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் 08ம் திகதி காதல் உறவுமுறையில் தலைமறைவான 18வயது இளைஞனும் 16வயது யுவதியும் 19.02.2018.திங்கள் கிழமை உடபுஸ்ஸலாவ பகுதியில் உள்ள இளைஞனின் உறவினர்கள் வீட்டில் வைத்து கைது செய்யபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர் .

சிறுமியின் பெற்றோர்களால் பதிவு செய்யபட்ட முறைபாட்டுக்கமைய குறித்த சிறுமியை தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட பொகவந்தலாவ பொலிஸார் 16வயது சிறுமியை உடபுஸ்ஸலாவ பகுதியில் உள்ள சந்தேகநபரின் உறவினர் வீட்டில் இருந்து மீட்கபட்டுள்ளதாகவும் சந்தேகநபர் கைது செய்யபட்டதாகவும் இவர்கள் இருவரும் 43 நாட்கள் தலைமறைவானியிருந்தாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த 16வயது சிறுமி சட்டவைத்திய அதிகாரியின் மருத்து பரீசோதனைக்காக டிக்கோயா கிழங்கன் ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர் .

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
(பொகவந்தலாவ நிருபர். சதீஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here