பொகவந்தலா சுகாதார அதிகார பிரிவுக்குட்பட்ட பகுதியில் இருவர் மரணம் அடைந்துள்ளதாகவும் 226 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலா சுகாதார வைத்திய அதிகாரி காரியலயம் தெரிவித்தது.
கடந்த மாதம் 20 ம் திகதி தொடக்கம் இன்று வரை வெளியான பிசிஆர் முடிவுகளின் படியே குறித்த எண்ணிக்கை இனங்காணப்பட்டுள்ளதாகவும் இதில் பொகவந்தலா சிரிபுர மற்றும். இன்ஜஸ்றி ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்று உள்ளாகி இருவர் மரணமடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பொகவந்தலா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கர்கஸ்வோல்ட், லொயினோன், கொட்டியாகலை, பெட்ரசோ. ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் இன்று (17) புதிதாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
தற்போது அதிகரித்து வரும் கொரோனா தொற்றினை தோட்டப்குதியில் இருந்து கட்டுப்படுத்தப்பட வேண்டுமான குறித்த பிரதேசங்களுக்கு தடுப்பூசிகள் உடனே பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் எனவும் அத்தோடு பொது மக்கள் கட்டாயம் சுகாதார வழிகாட்டல்களை பின் பற்றி மிகவும் அவதானமாக செயப்பட வேண்டும் எனவும் முடிந்தவரை பயணங்களை மட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும் என சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
கே.சுந்தரலிங்கம்