இந்த ஆண்டின் பொங்கல் பண்டிகை மிகவும் சிறப்பு வாய்ந்தது. பொங்கல் பண்டிகையின் போது சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்குள் நுழைகிறார்.
ஏனெனில் சுமார் 77 ஆண்டுகளுக்கு பின் இந்த ஆண்டின் பொங்கல் பண்டிகை நாளில் ரவி யோகத்துடன் வரியான் யோகமும் உருவாகிறது.பொங்கல் பண்டிகை நாளில் இப்படியான யோகம் உருவாவதால் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கப் போகிறது.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த பொங்கல் பண்டிகை மிகவும் அற்புதமாக இருக்கும். அதுவும் ஒவ்வொரு துறையினரும் கடின உழைப்பிற்கான பலனைப் பெறுவார்கள்.
சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணவரவும் உழைப்புக்கு ஏற்ப அற்புதமாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் பொங்கல் நாளில் நல்ல பலன்களைப் பெறுவார்கள்.
நல்ல வெற்றி கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும, மரியாதையும் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும்.
வாழ்க்கைத் துணையுடனான உறவு மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் உங்கள் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
மீனம்
ராசிக்காரர்களுக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். தொழிலைத் தொடங்கினால், அதில் நல்ல வெற்றி கிடைக்கும்.
பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு அதிக இலாபம் கிடைக்கும். பண வரவு சிறப்பாக இருப்பதால், உங்களின் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.
குடும்ப உறுப்பினர்களிடையேயான உறவு வலுவடையும்.