பொது இடங்களில் கொவிட் தடுப்பூசி அட்டை அவசியம்

0
209

கொவிட் தடுப்பூசி செலுத்திக்கொண்டமைக்கான அட்டை இல்லாதவர்கள் எதிர்வரும் காலத்தில் பொது இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் நடைபெற்ற கொவிட் தடுப்பு விசேட கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டது.

கொவிட் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளாதவர்களை பொது இடங்களுக்குள் அனுமதிக்காதிருப்பதற்கான சட்ட ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை பொது இடங்களுக்குள் அனுமதிக்காதிருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள கொவிட் தடுப்பு விசேட குழு தீர்மானித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here