தனிமைப்படுத்தல் ஊடரங்கு சட்டத்தினை தொடர்ந்து இன்று 42 நாட்களுக்கு பின் நகரங்கள் திறக்கப்பட்டன. இதனால் பொது மக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு பல நகரங்களிலும் தொற்று நீக்கம் செய்யப்பட்டன.
ஹட்டன் நகரசபைக்குட்பட்ட பகுதியில் ஹட்டன் நகரில் நீண்ட நாட்களுக்கு பின் வர்த்தக நிலையங்கள்,மற்றும் மரக்கறி கடைகள்,சந்தை கட்டிடத்தொகுதி ஆகிய திறக்கப்பட்டதனால் இன்று ஹட்டன் டிக்கோயா நகர சபையினால் தொற்று நீக்கம் செய்யப்பட்டன.
இதன் போது பொது மக்கள் பயன்படுத்தும் இடங்களும் தொற்று நீக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கே.சுந்தரலிங்கம்