வெற்றிபெற்று பொம்மைகளாக இருப்பதைவிட தோல்வியடைந்து வீர பெண்ணாக இருப்பதே மகிழ்ச்சி என சந்திரசேகரன் மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் அனுஷா சந்திரசேகரன் தெரிவித்தார்.
கடந்த தேர்தல்களில் வெற்றி வெற்று, பொம்மைகளாக இருப்பதை விட தோல்வி அடைந்து வீர பெண்ணாக இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்
சந்திரசேகரன் மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் அனுஷா சந்திரசேகரன் தலைமையில் நோர்வூட் வெஞ்சர் ஆலய மண்டபத்தில், வியாழக்கிழமை (10) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனை தெரிவித்தார்.
நிகழ்வில் சந்திரசேகரன் மக்கள் முன்னணியின் உப-தலைவர் டொமினிக், தேசிய அமைப்பாளர் விக்னேஷ்வரன், பிரதேச சபை உறுப்பினர் ஆறுமுகம் தியாகராஜா, அமைப்பாளர்களான சதீஸ்குமார், கேதீஸ், தேவராஜ், விஜயராகவன் உட்பட இளைஞர், மகளிர் அணி சார்பிலும், தோட்ட கமிட்டி தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் பங்கு கொண்டிருந்தனர்.இதன்போது மேலும் கருத்து தெரிவித்த பொதுச்செயலாளர்.
கடந்த முறை நாம் மைக் சின்னத்தில் போட்டியிட்ட போது நிறைய பேர் என்னிடம் கேட்டார்கள், அரசாங்கத்தோடு நீங்கள் சேர்ந்து கேட்டிருந்தால் வெற்றியடைந்திருப்பீர்கள், தனியாக கேட்டதால் தான் தோல்வியடைந்து விட்டீர்கள் என்று
இன்று அரசாங்கத்தின் பேரலையில வெற்றி பெற்ற நிறைய பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த மலையகத்தின் நுவரெலியா மாவட்டத்தில் இருக்கிறார்கள். ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.
என்றைக்கு அரசாங்கம்ஆணை கொடுக்கும் மக்களுக்கு சேவை செய்யலாம் என்று அரசாங்க மேல் மட்ட ஆணைக்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள். மக்களுக்கு சேவை செய்வதை போல் தெரியவில்லை, என்னைக்கு ஆணை கிடைக்கும் அந்த ஆணை வந்தவுடன் சேவை செய்வோம் என ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களும் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
வெற்றி பெற்று இப்படி பொம்மையாக இருப்பதை விட தோல்வியடைந்து வீர பெண்ணாக இருப்பது எனக்கு மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது.
தோல்வியடைந்தாலும் விதையாக பிரதேச சபை ஆசனங்களை பெற்றிருக்கிறோம். இந்த விதை இன்னும் பெரிய விருட்சமாக மாறும். அதை மாற்றாமல் என்னுடைய தந்தை சந்திரசேகரன் எப்படி ஓயவில்லையோ அதேபோன்று தலைவர் சந்திரசேகரனுடைய ஆசையின் படி அவருடைய ஆசியோடு அவருடைய கனவை நனவாக்காமல் இந்த அனுஷா சந்திரசேகரன் ஒருபோதும் ஓயமாட்டேன்.
உங்களுடைய வாக்குகளால் தான் எங்களுடைய கட்சியின் வெற்றி சாத்தியம் ஆக்கப்பட்டிருக்கிறது. எங்களுடைய என்பதை விட நம்முடைய கட்சி, நமது மாற்றம், நம்முடைய கட்சியின் வளர்ச்சி உங்களால் தான் சாத்தியமாகியது. ஆகவே என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்தார்.