பொரளந்த பீற்ரூ பகுதியில் மின் கம்பம் குடை சாய்கின்ற நிலையில் உள்ளமையினால் அச்சத்தோடு பயணிக்கும் மக்கள்.

0
204

நுவரெலியா பிரதேசத்திற்குற்பட்ட பொரளந்த பீற்ரூ அந்தோணியார் தேவாலயத்திற்கு அருகாமையில் மின் கம்பம் ஒன்று குடை சாய்கின்ற நிலையில் உள்ளமையினால் மக்கள் மிகுந்த அவதானத்திற்குட்பட்டுள்ளனர்.

இம்மின்கம்பமானது கீழே குடைசாயுமாயின் அருகிலுள்ள தேவாலயம் உட்பட முப்பதுக்கு மேற்பட்ட குடியிருப்புகளுக்கும் ஆபத்து நேரும் வாய்ப்புள்ளது. அத்துடன் தேவாலயத்தின் நுழைவாயிலின் அருகாமையில் அமைந்துள்ளதால் மக்களனைவரும் இப்பாதையில் மிகுந்த அச்சத்தோடு பயணிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நுவரெலியா பிரேதச சபையினர் இதனை கவனத்திற் கொண்டு, விரைவில் மறு சீரமைத்துத் தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டி.சந்ரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here