நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினை தொடர்ந்து மலையகத்தில் தோட்டப்புறங்களில் வாழும் குடும்பங்கள் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன இதனால் அவர்கள் அன்றாட உணவினை கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலை பல குடும்பங்களுக்கு ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில் பல மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கொழும்பில் உள்ள ஒரு குடும்பம் இவ்வாறு பாதிக்கப்பட்ட சுமார் 150 மாணவர்களுக்கு பாதணிகள் மற்றும், டிப்பன் பெட்டி ஆகியன பெற்றுக்கொடுக்கும் நிகழ்வு சித்தமு பெண்கள் கமக்கார அமைப்பின் ஏற்பாட்டில் இன்று (12) திகதி ஹட்டன் தொழிலாளர் பொழில் மண்டபத்தில் விவசாய பரிசோதனை உற்பத்தியாளர் ஜெ.ரப்பாய்டீன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதற்கு ஹட்டன் மேற்கு தெற்கு, செனன் பன்மூர் உள்ளிட்ட கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த வறிய குடும்பங்களின் மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான அனுசரணையினை திருமதி ரூவனி டி சில்வா, மற்றும் நவீன் டி சில்வா தம்பதிகளின் குடும்ப உறுப்பினர்களின் பங்களிப்பில் சுமார் எட்டு லட்சம் ரூபா பெறுமதியில் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன. குறித்த குடும்பம் இந்த கிராம சேவகர் பிரிவில் வாழும் மிகவும் வறிய 200 குடும்பங்களுக்கு சனிக்கிழமை தோறும் மதிய உணவு பெற்றுக்கொடுக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
மலைவாஞ்ஞன்