போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக பொறுப்புக்கூறும் விசாரணைகளில், வெளிநாட்டு நீதிபதிகள் எமக்குத் தேவையில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு நீதிபதிகள் எமக்குத் தேவையில்லை. எமது நாட்டில் இருக்கும் எந்தப் பிரச்சினைகளையும், வெளிநாட்டுத் தலையீடுகள் இல்லாமல் நாமே தீர்த்துக் கொள்ள முடியும்.
தேவைப்பட்டால் வெளிநாட்டு தொழில்நுட்ப உதவிகளை கோர முடியும். ஆனால், கடப்பாடுகள், நிபந்தனைகளின்றியே அந்த உதவி பெறப்படும். என்றும் அவர் தெரிவித்துள்ளார்.