வடக்கு மாகாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தவிருப்பதாக பொலிஸாருக்கு தொலைபேசி அழைப்புக்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கில் உள்ள 10 பொலிஸ் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படவிருப்பதாக குறித்த தொலைபேசி அழைப்பு மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட அழைப்புக்கள் கடந்த 11 ஆம் திகதி பிற்பகல் 1.15 தொடக்கம் 1.20 வரையான இடைவேளையில் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விசாரணை தொடங்கியுள்ளதாகவும் எனினும் வடக்கின் பொலிஸ் பிரிவின் பாதுகாப்பு தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்படுவதாகவும் பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.