போக்குவர்த்திற்கு இடையூரான கற்பாறையை அகற்ற இ.தொ.கா நடவடிக்கை

0
178

டயகம போடைஸ் ஊடான ஹட்டன் வீதியானது அண்மையில் ஏற்ப்பட்ட சீரற்றகாலநிலை காரணமாக போடைஸ் NC பகுதியில் வீதிதாழ் இறங்கி வாகனங்கள் செல்லமுடியாத நிலை ஏற்ப்பட்டது.இதனை தொடர்ந்து பயணிகளும்,வாகன சாரதிகள்,பேருந்து உரிமையாளர்கள் ஆகியோர் இ.தொ.கா பொதுச்செயலாளரும் தலைவருமான கௌரவ. ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் கவனத்திற்கு கொண்டுசென்றதை தொடர்ந்து உடனடியாக கௌரவ. ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் ஆலோசணைக்கு அமைய நோர்வூட் மற்றும் அக்கரப்பத்தனை பிரதேச சபைகள் மூலம் நிதி ஒதுக்கப்பட்டு இவ்வீதியானது தற்காலிகமாக புணரமைப்பு செய்து கொடுக்கப்பட்டது.எனினும் பேருந்துகள் பயணிக்க முடியாத நிலை காணப்பட்டது.

இநநிலையை சீர்செய்வதற்கு வீதியின் அருகில் பாரிய பாறை ஒன்றை அகற்ற வேண்டி மத்தியமாகாண சபை உறுப்பினர்களான கௌரவ.கனபதி கனகராஜ் மற்றும் கௌரவ.சக்திவேல் அவர்களின முயற்சியினால் நோர்வூட் மற்றும் அக்கரப்பத்தனை பிரதேச சபைகள் இணைந்து நிதி ஒதுக்கப்பட்டு கற்பாறையை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன.

குலசேகர் லீபன், அக்கரப்பத்தனை நிருபர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here