” மலையக அபிவிருத்தி அதிகார சபையென்பது தமிழ் முற்போக்கு கூட்டணி போராடி பெற்ற உரிமையாகும். அதனை வலுப்படுத்த வேண்டுமேதவிர இழந்து விடக்கூடாது.” – என்று தொழிலாளர் தேசிய சங்க உறுப்பினரும், பசறை பிரதேச சபை உறுப்பினருமான த.பிரதீபன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,
” பதுளை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுவிடயத்தில் மௌனம் காத்துவருகின்றனர்.
எனவே மலையக மக்களுடைய உரிமைகளுக்காக பெற்றெடுக்கப்பட்ட இந்த அதிகார சபை இழந்து விடக்கூடாது.
மலைய மக்களுக்காக கிடைக்கப்பெற்ற இந்த அங்கீகாரத்தை இந்த அரசாங்கம் தட்டி பறித்தால் , அதற்கு எதிராக மக்களை வீதியில் இறக்கி போராடுவதற்கும் நாங்கள் தயாராக இருக்கின்றோம்.” என்றுள்ளது.