தமிழ் திரையுலகில் எந்தவித சினிமா பின்புலமும் இல்லாமல், சாதித்த நடிகர்களில் ஆரியும் ஒருவர். ‘நெடுஞ்சாலை’, ‘தரணி’, ‘மாயா’, ‘உன்னோடு கா’, ‘முப்பரிமாணம்’, ‘நாகேஷ் திரையரங்கம்’, ‘நெஞ்சுக்கு நீதி’, ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ போன்ற பல படங்களில் நடித்துள்ளார். ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் வெற்றிபெற்று மேலும் பிரபலமானார். விஜய் மில்டன் இயக்கத்தில் ‘கோலிசோடா 3’ படத்தில் நடித்துள்ளார்




