மனிதன் உயிர்வாழ்வதற்கு மிகவும் முக்கியமாக தேவை தண்ணீர் மற்றும் உணவு . இதில் ஒன்று இல்லை என்றாலும் எம்மால் உயிர் வாழ முடியாது. உணவு உண்பது ஊடாக மாத்திரம் நமது உடலுக்கு ஆரோக்கியம் கிடைத்து விடாது.
நாங்கள் அந்த உணவை எவ்வாறு உண்கின்றோம் என்பதையும் பொறுத்து உள்ளது . நமது முன்னோர்கள் எந்த உணவை எவ்வாறு உண்ண வேண்டும் என்பது தொடர்பில் கூறி இருப்பது மூடநம்பிக்கையாக இருந்தாலும் அதில் பல அறிவியல்பூர்வமான உண்ம்மைகளும் இருக்கின்றன.
அந்தவகையில், சாப்பிடும் போது செய்யக்கூடாத சில பழக்கவழக்கங்கள் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.
சாப்பிடும்போது tv அல்லது செல்போனை பார்த்துக்கொண்டு சாப்பிடுவதை முற்றிலுமாக வேண்டும். ஏனனென்றால் இது போன்ற செயற்பாடுகளால் நாம் சாப்பிடும் உணவில் கவனம் செலுத்த முடியாமலும் வயிற்றுக்குள் கிருமிகள் செல்லவும் வாய்ப்பு உள்ளது.
நடந்துகொண்டோ அல்லது நின்றுகொண்டோ சாப்பிடுவதை முற்றிலுமாக நிருத்த்திக்கொள்ளுங்கள். இவ்வாறு உண்ணுவதன் காரணமாக நாங்கள் உண்ட உணவு உடனே செரிமானம் ஆகிவிடுவதால் அடிக்கடி பசி உணர்வை ஏற்படுத்தும். இதன் விளைவாக உடல் எடை அதிகரிக்க கூடும்.
உணவு உண்ணும்போது கைகளை தரையில் ஊன்றி உண்ணக்கூடாது. அப்படி உணவு உண்டால் உணவு உடலில் ஒட்டாது என சொல்வார்கள். அவ்வாறு உண்பதினால் உணவு முடியாத அளவிற்கு வயிறு சுருங்கி விடும் என சொல்வார்கள்.
நமது முன்னோர்கள் தரையில் அமர்ந்து கால்களை மடக்கி உட்கார்ந்து உண்பதே நல்லது என்பார்கள். அப்போது தான் சாப்பிடும் உணவு சரியாக இரைப்பையை அடைந்து செரிமானமாகும்.
உண்ணும்போது அதிகம் தண்ணீர் குடிக்கக்கூடாது என சொல்வார்கள். தேவைப்பட்டால் தாகத்திற்கு மாத்திரம் சிறிது குடிக்கலாம். அதிகம் குடித்தால் உணவை செரிக்க உதவும் அமிலத்தின் திறன் குறைந்து விடுகின்றது.